பெங்களூரு பல்கலைக்கழகத்துக்குள் வரும் வாகனங்கள் இன்று முதல் சோதனை

பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் இன்று முதல் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று துணை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

Update: 2022-10-12 18:45 GMT

பெங்களூரு:

மாணவி படுகாயம்

பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ஷில்பா என்ற மாணவி படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் தனியார் வாகனங்கள் அதிகமாக வருவது தான் விபத்துக்கு காரணம் என்று கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நேற்று முன்தினம் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மந்திரி சோமண்ணா, தனியார் வாகனங்களை தடை செய்வது குறித்து முதல்-மந்திரியுடன் பேசுவதாக உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிப்பது குறித்து பெங்களூரு பல்கலைக்கழக அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஹெல்மெட் அணிய...

இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி, பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் லட்சுமண் நிம்பரகி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை (அதாவது இன்று) முதல் வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகனங்களில் 3 பேர் வர கூடாது. கூட்டத்தில் தனியார் வாகனங்கள், கனரக வாகனங்களை தடை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு இறுதி முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்