கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக வந்திதா சர்மா நியமனம்

கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவரான வந்திதா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-05-27 14:24 GMT

பெங்களூரு,

கர்நாடக அரசின் தலைமை செயலாளராக பணியாற்றி வருபவர் ரவிக்குமார். அவர் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை செயலாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து கடந்த முறை நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பணி மூப்பு பட்டியலில் 9 மூத்த அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து தலைமை செயலாளராக நியமிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவரான வந்திதா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கூடுதல் தலைமை செயலாளராகவும், வளர்ச்சித்துறை கமிஷனராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தது. அவர் வருகிற 31-ந் தேதி கர்நாடக அரசின் புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்