கடும் பனிமூட்டம்: உத்தரபிரதேசத்தில் ரெயில்கள் 6-7 மணிநேரம் தாமதம்

கடும் பனிமூட்டம் காரணமாக உத்தரபிரதேசத்தில் ரெயில்கள் இன்று 6-7 மணிநேரம் தாமதமாக இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-01-11 03:55 GMT

கான்பூர்,

வட இந்தியா முழுவதும் குளிர் அலை மற்றும் அடர்ந்த பனிமூட்டமான வானிலையின் பிடியில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏறக்குறைய 26 ரெயில்கள் இன்று தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் கடும் குளிர் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று பெரும்பாலான ரெயில்கள் 6-7 மணிநேரம் தாமதமாக இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில் ரத்து செய்யப்பட்டது குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிமூட்டம் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்