கள்ளக்காதலி முன் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை: உத்தரபிரதேசத்தில் சம்பவம்

உத்தரபிரதேசத்தில் மனைவியுடன் வீடியோ காலில் சண்டை போட்ட வாலிபர், கள்ளக்காதலி முன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-09-29 19:01 GMT

லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜமுவா கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான வாலிபர் சோனு (வயது 30). இவர் கடந்த 8, 9 மாதங்களாக ஒரு இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

அதை அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் எதிர்த்து வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சோனு தனது கள்ளக்காதலியுடன் ஒரு காரில் இருந்துள்ளார்.

அப்போது சோனுவை அவரது மனைவி செல்போனில் வீடியோ காலில் தொடர்பு கொண்டிருக்கிறார். பேச்சு முற்றி சண்டை ஆகியிருக்கிறது. அதில் ஆத்திரம் தலைக்கேறிய சோனு, தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

அதிர்ச்சி அடைந்த கள்ளக்காதலி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வாலிபர் சோனுவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்