உ.பி. முதல்-மந்திரிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-09 03:26 GMT



லக்னோ,



உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தலில் 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக மீண்டும் பொறுப்பேற்று உள்ளார். அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்ணுக்கான வாட்ஸ்அப்புக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது இன்னும் 3 நாட்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இந்த மிரட்டல் செய்தி கடந்த 2-ந்தேதி விடப்பட்டு இருந்தது. இதுபற்றி உதவி எண் சேவைக்கான உயரதிகாரி போலீசில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை அடையாளம் காணும் மற்றும் கைது செய்யும் பணி நடந்து வருகிறது. சுஷாந்த் கோல்ப் சிட்டி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்