மனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம்... தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

மனைவியுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் தம்பியை, அண்ணன் அடித்துக் கொலை செய்தார்.

Update: 2024-08-18 16:29 GMT

கோப்புப்படம்

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் தனது மனைவியுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் தம்பியை, அண்ணன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முனேந்திரா என்ற நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மனைவி, தம்பி ஜிதேந்திராவுடன் (வயது 25) தொடர்பில் இருப்பதாக முனேந்திராவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக முனேந்திராவுக்கும், அவரது தம்பி ஜிதேந்திராவுக்கும் இடையே நேற்று நள்ளிரவில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, முனேந்திரா பம்பின் ஒரு பகுதியால் ஜிதேந்திராவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜிதேந்திரா மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலின் பேரில் போலீசார், முனேந்திராவை இன்று காலை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்