பேஸ்புக்கில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி!
பேஸ்புக்கில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் மூலம் பழகி 8 வருடங்களாக காதலித்து, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சன்வார் என்பவரை இந்தோனேஷியாவை சேர்ந்த மிப்தாகுல் என்ற பெண் திருமணம் செய்துகொண்டார்.
லக்னோ,
உத்தரபிரதேசம் ருத்ராபூர் தாலுகாவில் உள்ள நாராயண்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சன்வார் என்பவர் இவர் பொழுதுபோக்கிற்காக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி நண்பர்களுடன் உரையாடி வந்தார். அப்போது அவர் 2015 ஆம் ஆண்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கற்றுக் கொண்டிருந்த போது, இந்தோனேசியாவின் மேடானைச் சேர்ந்த மிப்தாகுல் என்பவருக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்கியூஸ்ட்டை அனுப்பினார்.
அதனைதொடர்ந்து இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. 2017 இல் தென்னிந்தியாவை ஒரு சூறாவளி தாக்கியபோது, இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். மேலும் இது அவர்களுக்கு நட்பை விரிவடைய செய்தது. சன்வாரும் மிப்தாகுல் ஒருவரையொருவர் காதலிப்பதை உணர்ந்தார்கள். இந்தச் செய்தியைக் கேட்டதும் மிப்தாகுல் மற்றும் அவரது குடும்பத்தினரின் நலனில் அக்கறை கொண்டிருந்தார்.
மிப்தாகுல் தனது காதலை வெளிப்படுத்தியபோது, ஆம் என்று சொல்ல மிப்தாகுல் ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு கடல் கடந்து மிப்தாகுலை சந்திக்க முதன் முறையாக விமானத்தில் இந்தோனேசியாவிற்குச் சென்றார், அதன் பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
மிப்தாகுலை காதலிப்பதாக கூறி அவரையே திருமணம் செய்தாக கூறி குடும்பத்தில் சம்மதம் வாங்கினார். இருவரும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவரது குடும்பத்தினர் காதலுக்கு ஒப்புக்கொண்டனர்.
மிப்தாகுலின் தந்தை இறந்ததால், அவர் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் மேடானில் வசித்து வந்தார்.
மிப்தாகுல் தனது பட்டப்படிப்பை முடித்தவுடன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
சன்வார் தனது குடும்பத்தினருக்கு தெரிவிக்க இந்தியா திரும்பினார். அவர் 2019 இல் மீண்டும் இந்தோனேசியாவிற்கு சென்று மிப்தாகுலை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர் ஆனால் கொரோனா அவர்களின் திருமணத்தை தாமதப்படுத்தியது.
இந்தநிலையில், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி இந்தோனேசியாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த வாரம், தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை டியோரியாவில் ஏற்பாடு செய்தனர்.
இயற்கை சீற்றங்களின்போது, இருவருக்கிடையேயான நட்பு நெருக்கமானது எனவும், பல போராட்டங்களுக்கு பிறகு இருவரும் இணைந்தாக மணமக்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.