2024 தேர்தல்: வாரணாசியில் பிரியங்காவை நிறுத்த திட்டம் - உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்
2024 தேர்தலில் வாரணாசியில் பிரியங்காவை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக அஜய் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, அடுத்தாண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்த பரிந்துரைக்க உள்ளதாக கூறினார். மேலும் "மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்" என்றார்.
"அவர் எந்த தொகுதியில் வேணுமானாலும் போட்டியிடட்டும். தேர்தலில் வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால் வாரணாசியில் நிற்பதற்கும் அழுத்தம் கொடுப்போம்" என கூறினார். வாரணாசி தொகுதியை தொடர்ந்து 2 முறை பிரதமர் மோடி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரியங்காவை நிறுத்த இப்போதே காங்கிரசார் வலியுறுத்துகின்றனர்.