உ.பி.: 6 பேரை பலி கொண்ட பஸ்சுக்கு முன்பே 15 முறை அபராதம் விதிக்கப்பட்டது; போலீசார் அதிர்ச்சி தகவல்

உத்தர பிரதேசத்தில் தவறான வழியில் சென்று 6 பேரை பலி கொண்ட பஸ்சுக்கு, இதற்கு முன்பு 15 முறை அபராதம் விதிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-07-13 07:51 GMT

மீரட்,

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் விரைவு சாலையில் கடந்த செவ்வாய் கிழமை காலையில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த பஸ் ஒன்று அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தின் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் படுகாயமடைந்தனர். அந்த பஸ் தவறான வழியில் சென்று உள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, பஸ் உரிமையாளர் சந்தீப் சவுத்ரி கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் வைத்து பிடிபட்ட பஸ் ஓட்டுநர் பிரேம் பால் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி வேவ் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி பிரகாஷ் சிங் கூறும்போது, அந்த பஸ்சுக்கு, இதற்கு முன்பு 15 முறை ஆன்லைன் வழியே அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் 3 முறை தவறான வழியில் சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்