மலேசியாவுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம்; இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-07-10 08:40 GMT

கோலாலம்பூர்,

மலேசியா நாட்டுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதுபற்றி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணத்தின் பகுதியாக, மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரை இன்று சென்றடைவேன்.

இதன்பின், அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி தத்தோ செரி முகமது ஹசனை நேரில் சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தும் ஆவலோடு இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், மலேசியா சென்றடைந்த அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வருகையை முன்னிட்டு கோஷங்களை எழுப்பியபடியும் மற்றும் மூவர்ண கொடியை அசைத்தபடியும் அவர்கள் இருந்தனர்.

அவர்களை பாதுகாப்பு மந்திரி சிங், நமஸ்தே என கூறி வாழ்த்தியதுடன், அவர்களுடன் கைகுலுக்கினார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ள இருக்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த பயணத்தில் அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி தத்தோ செரி முகமது ஹசனை நேரில் சந்தித்து பேசுகிறார். மலேசிய பிரதமர் ஒய்.பி. தத்தோ செரி அன்வர் பின் இப்ராகிமையும் சந்தித்து பேசுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்