என்.சி.சி. விரிவாக்கத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல்

கல்வி நிறுவனங்களில் என்.சி.சி.க்காக அதிகரித்து வரும் தேவையை விரிவாக்கத் திட்டம் பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-13 17:00 GMT

புதுடெல்லி,

தேசிய மாணவர் படையை(என்.சி.சி.) விரிவுபடுத்தி, கூடுதலாக 3 லட்சம் கேடட் பணியிடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விரிவாக்கம் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் என்.சி.சி.க்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதோடு முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களின் திறன் மற்றும் அனுபவத்தை பயன்படுத்தும் வகையில் அவர்களை என்.சி.சி. பயிற்சியாளர்களாக பணியமர்த்துவது இந்த விரிவாக்கத் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்குவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்