'நீட்' தேர்வு மையத்தில் மத்திய சுகாதார மந்திரி ஆய்வு

‘நீட்’ தேர்வு மையத்தில் மத்திய சுகாதார மந்திரி ஆய்வு நடத்தினார்.

Update: 2023-03-05 18:50 GMT

சண்டிகார்,

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு நேற்று நடந்தது. 277 நகரங்களில் 902 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 லட்சத்து 8 ஆயிரத்து 898 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்தநிலையில், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்துக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா திடீரென நேரில் சென்றார்.

அங்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திருப்தி தெரிவித்தார். மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களின் பெற்றோருடனும் உரையாடினார்.

பின்னர், பாட்டியாலாவில் உள்ள காளிதேவி கோவிலுக்கும், குருத்வாரா ஸ்ரீ துக்னிவரன் சாஹிப் ஆலயத்துக்கும் சென்று வழிபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்