பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துங்கள் - பிரதமர் மோடிக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை

மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை கொண்டுவரும்படி பிரதமர் மோடிக்கு நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-05-22 09:35 GMT
Image Courtesy : PTI

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பங்கேற்று பேசினார்.

ராஜ் தாக்கரே பேசுகையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரும்படி பிரதமரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அதேபோல், மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தையும் கொண்டுவர வேண்டும். மேலும், அவுரங்காபாத் நகரின் பெயரை சம்பஜிநாகா என மாற்றவேண்டும். இவற்றை ஒருமுறை செயல்படுத்துங்கள் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.

ஜூன் 5-ம் தேதி அயோத்திக்கு செல்ல இருந்த எனது பயணத்தை ஒத்திவைப்பதாக நான் இரு நாட்களுக்கு முன் டுவிட்டரில் பதிவிட்டேன். இது குறித்து மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம் என்பதற்காக வேண்டுமென்றே தான் நான் அந்த அறிக்கையை வெளியிட்டேன். நான் அயோத்தியாவுக்கு செல்ல எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் என்னை சிக்கவைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், பிரச்சினையில் சிக்கக்கூடாது என நான் முடிவெடுத்துள்ளேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்