இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை
இறைச்சிக்காக மாடுகளை கடத்திய இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மூடிகெரே கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சிக்கமகளூ-
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோணிபீடு பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி காபி தோட்டத்தில் பசுமாடு ஒன்றை கட்டி வைத்திருந்தார். இதனை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோணிபீடு போலீசார் அதேப்பகுதியை சேர்ந்த யாரிஸ் (வயது 27), இம்ரான் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் இறைச்சிக்காக மாட்டை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் போலீசார் மூடிகெரே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மூடிகெரே கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி ரேணுகா தீர்ப்பு வழங்கினார். அப்போது யாரிஸ், இம்ரான் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.