ஆன்லைனில் மதுபானம் வாங்க முயன்று ரூ.2¾ லட்சத்தை இழந்த நபர்
ஆன்லைனில் மதுபானம் வாங்க முயன்று நபர் ஒருவர் ரூ.2¾ லட்சத்தை இழந்தார்.
பெங்களூரு: பெங்களூரு அல்சூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜ். இவர் ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்து இருந்தார். அப்போது ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் மதுபானத்தை வீட்டிற்கு வந்து வினியோகம் செய்ய ரூ.100 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் ராஜின் கிரெடிட் கார்டு நம்பரையும் மர்மநபர் வாங்கி கொண்டார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் ராஜின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2.70 லட்சத்தை எடுக்கப்பட்டதாக வந்தது. அப்போது தான் மர்மநபர் தன்னை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்தது ராஜிக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.