கெட்ட கனவுகளால் தினமும் தொல்லை... திருடிய சாமி நகைகளை மன்னிப்பு குறிப்புடன், திருப்பி அளித்த திருடன்

ஒடிசாவில் கெட்ட கனவுகள் தொல்லையால் கோவிலில் திருடிய சாமி நகைகளை மன்னிப்பு குறிப்புடன், திருடன் திருப்பி அளித்த சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-05-16 14:14 GMT

புவனேஸ்வர்,

ஒடிசாவின் கோபிநாத்பூர் பகுதியில் கோபிநாத் கோவில் உள்ளது. கடவுள் கிருஷ்ணருக்கான இந்த கோவிலில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்பு விலையுயர்ந்த நகைகளை ஒருவர் திருடி சென்று உள்ளார்.

சமீபத்தில் அந்த நபர் பகவத் கீதையை படித்து உள்ளார். அதன்பின் தனது தவறுகளை அவர் உணர்ந்து உள்ளார். கிருஷ்ணர் மற்றும் ராதாவின் சிலைகளில் இருந்த,லட்சக்கணக்கான மதிப்பிலான நகைகள் அவை.

இதனை தொடர்ந்து அந்த நகைகளை அவர் திருப்பி அளிக்க முடிவு செய்து உள்ளார். இதற்கு மன்னிப்பு குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்து உள்ளார். அதில், 2014-ம் ஆண்டு கோவிலில் இருந்த இந்த ஆபரணங்களை எடுத்து சென்றேன்.

அதன்பின்னர், இந்த 9 ஆண்டுகளாக ஒரே தொல்லை. எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். அதனால், இந்த நகைகளை திருப்பி ஒப்படைக்கிறேன் என பெயர் வெளியிடாமல் தெரிவித்து உள்ளார்.

அந்த திருடப்பட்ட நகைகளில் தலையில் அணியும் கிரீடம், காதணிகள், கைவளையல்கள் மற்றும் ஒரு புல்லாங்குழல் ஆகியவையும் அடங்கும். கோவிலின் முன் கதவு பக்கத்தில் பை ஒன்றில் இருந்த நகைகளை வைத்து விட்டு சென்று உள்ளார்.

இதுபோக கூடுதலாக ரூ.300 பணமும் வைத்து விட்டு சென்றுள்ளார். கடவுள் கிருஷ்ணரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, திருடிய நகைகளை கோவிலிடம் திருப்பி கொடுப்பது என முடிவு செய்தேன் என அந்த குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார். இதனால், கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்