பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக படகு சேவையை தொடங்கிய திரிபுரா அரசு..!

பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதத்தில் இலவசமாக பள்ளி படகு சேவையை திரிபுரா அரசு தொடங்கி உள்ளது.

Update: 2023-07-16 17:02 GMT

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் குமாதி மாவட்டத்தில் உள்ள டம்பூர் ஏரி கரையோரங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களை அவர்களின் பள்ளிக்கு இலவசமாக அழைத்துச் செல்ல, ரூ. 1.20 லட்சம் செலவில் திரிபுரா பள்ளிக் கல்வித் துறை 'பள்ளி படகு' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

டம்பூர் ஏரியின் தீவுகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகள், படகுச் சவாரிக் கட்டணத்தைச் செலுத்த முடியாததால், பள்ளிக்குச் செல்வதில் சிரமப்பட்டு வந்தனர். மழைக்காலங்களில், நீர்நிலைகள் வழியாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. அவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களை அவர்களது இல்லத்தில் இருந்து பள்ளிக்கு இலவசமாக அழைத்துச் செல்வதற்கான 'பள்ளிப் படகு' ஒன்றை துவக்கி உள்ளது.

ஏழை பழங்குடியின மாணவர்களுக்காக பள்ளி படகு அறிமுகப்படுத்தும் புதுமையான யோசனையை திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்