பெங்களூருவில் பாதசாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் உதவ வேண்டும்

பெங்களூருவில் பாதசாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் உதவ வேண்டும் என்று மந்திரி அரக ஞானேந்திரா அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-10-12 18:45 GMT

பெங்களூரு:

போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று போக்குவரத்து நெரிசல், பாதசாரிகள் மற்றும் மூத்த குடிமக்களின் நலன் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் மந்திரி சுரேஷ்குமார், கூடுதல் டி.ஜி.பி. உமேஷ்குமார், கூடுதல் போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) ரவிகாந்தேகவுடா உள்பட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் சுரேஷ்குமார் பேசுகையில், பெங்களூருவில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் பாதசாரிகள், மூத்த குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நலனை காக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். மந்திரி அரக ஞானேந்திரா, பாதசாரிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சாலையை கடக்கும்போது, அவர்களுக்கு போக்குவரத்து போலீசார் உதவ வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்