கனமழையால் கடுங்குளிரில் திருப்பதி: மழைக்கு மத்தியிலும் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதியில் மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2022-08-26 06:27 GMT

கோப்புப்படம் 

திருப்பதி,

ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

திருப்பதியில் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியதால் நீண்ட தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

மழையில் நனைந்தபடி பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இரவு நேரங்களில் கடும் குளிர் வீசுவதால் பக்தர்கள் குளிரால் நடுங்குகின்றனர். குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.

திருப்பதியில் நேற்று 68,128 பேர் தரிசனம் செய்தனர். 34,021 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.44 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 

Tags:    

மேலும் செய்திகள்