கஞ்சா விற்ற வழக்கில் மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை
மைசூருவில் கஞ்சா விற்ற வழக்கில் மூவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மைசூரு:
மைசூரு கலால்துறை போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மைசூரு மண்டி மொகல்லா பகுதியை சேர்ந்த இர்பான் பாஷா(வயது 33), ஹதிக் பாஷா(26), அசரத் பாஷா(32) ஆகியோர் என்பது தெரியவந்து. அவர்களிடமிருந்து 11 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுெதாடர்பான வழக்கு விசாரணை மைசூரு மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ரங்கநாத், கஞ்சா விற்ற 3 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.