முழு அடைப்பில் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை-போலீஸ் கமிஷனர் தயானந்த் பேட்டி

பெங்களூருவில் நடந்த முழு அடைப்பில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-26 18:45 GMT

பெங்களூரு:-

144 தடை உத்தரவு

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கிடையே முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 12 மணி முதலே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

மைசூரு ரோடு, பேடராயனபுரா, சேட்டிலைட் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். முன் எச்சரிக்கையாக நேற்று முன்தினமே 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் நேற்று பெங்களூருவில் முழு அடைப்பு அமைதியான முறையில் நடந்தது. இது

குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடந்துள்ளது. நகரில் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக கடைகளை மூட செய்வது, மக்களை மிரட்டுவது உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெறவில்லை.

உயர் அதிகாரிகளில் இருந்து மற்ற போலீஸ்காரர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஊர்வலம் நடத்த முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 144 தடை உத்தரவு மீறப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்