3 துணை முதல்-மந்திரிகளை உருவாக்கினால் தவறில்லை மந்திரி தினேஷ் குண்டுராவ் பேட்டி

கர்நாடகத்தில் 3 துணை முதல்-மந்திரிகளை உருவாக்கினால் தவறில்லை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Update: 2023-09-20 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒற்றுமையாக போராட வேண்டும்.

மேலும் இதுதொடர்பாக கா்நாடக எம்.பி.க்கள் அனைவரும் முதல்-மந்திரி சித்தராமையாவுடன் டெல்லி சென்றுள்ளனர். அங்கு பிரதமர் மோடியிடம் பேச வேண்டும் என முதல்-மந்திரி சித்தராைமயா நேரம் கேட்டுள்ளார்.

ஆனால் இதுவரை அவருக்கு நேரம் கொடுக்கவில்லை. கோர்ட்டு உத்தர விட்டாலும் சில பிரச்சினைகளுக்கு கர்நாடக மக்களுக்கு துணையாக நாம் நிற்க வேண்டும். கர்நாடகத்தில் 3 துணை முதல்-மந்திரிகள் தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன. அப்படி 3 துணை முதல்-மந்திரிகளை உருவாக்கினால் தவறில்லை.

பா.ஜனதாவால் எதிர்க்கட்சி தலைவரையே தேர்ந்தெடுக்க முடியவில்லை. அவர்கள் எப்படி மக்கள் பிரச்சினைக்கு வருவார்கள், என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்