தொழிலில் சிறியது, பெரியது என ஒன்றும் இல்லை - மோகன் பகவத் பேச்சு

தொழிலில் சிறியது, பெரியது என ஒன்றும் இல்லை அனைத்து வேலைகளையும் மதிக்க வேண்டும் என்று மோகன் பகவத் கூறினார்.

Update: 2023-02-07 00:57 GMT

மும்பை,

மும்பையில் நேற்று நடந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒருவர் எந்த வேலை செய்தாலும், அதை மதிக்க வேண்டும். தொழிலாளர்கள் மதிக்கப்படாதது தான் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. ஒரு வேலைக்கு அறிவு சார்ந்த அல்லது உடல் உழைப்பு என எது தேவைப்பட்டாலும் அதற்கு கடின உழைப்பு தேவைப்படுகிறது. எல்லா வேலையும் மதிக்கப்பட வேண்டும்.

எல்லோரும் வேலைக்கு பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 10 சதவீத அரசு வேலைகள் தான் உள்ளன. மற்ற ேவலைகள் 20 சதவீதம் உள்ளது. எந்த ஒரு சமூகத்தாலும் 30 சதவீதத்திற்கு மேல் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. தேவை அதிகம் உள்ள உடல் உழைப்பால் செய்யும் வேலைகளுக்கு மதிப்பில்லாமல் உள்ளது.

எல்லா வேலைகளும் சமுதாயத்திற்காக மேற்கொள்ளப்படும் போது அதில் ஒன்றை பெரியது எனவும், மற்றொன்றை சிறியது எனவும் எப்படி கூற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்