மின்சாரம் தாக்கி காட்டுயானை செத்தது

மின்சாரம் தாக்கி காட்டுயானை செத்தது

Update: 2022-07-09 21:18 GMT

மைசூரு: மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா இரேஹள்ளி கிராமத்தில் மேலேயூர் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க சில தோட்டங்களில் விவசாயிகள் மின்வேலி அமைத்துள்ளனர். சில விளைநிலங்கள் வழியாக செல்லும் மின்வயர்கள் தாழ்வாக செல்வதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை வெளியேறி அருகில் உள்ள தோட்டத்தில் புகுந்துள்ளது. அந்த சமயத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் யானையின் தும்பிக்கை பட்டுள்ளது.

இதில் மின்சாரம் தாக்கி யானை சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தது. இதுபற்றி அறிந்ததும் வன அலுவலர் ரமேஷ்குமார், உதவி வன அலுவலர் பரமேஸ் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று, செத்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. செத்துப்போன யானைக்கு 20 வயது இருக்கும் என்றும், அது ஆண் யானை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்