மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு

வரிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.;

Update: 2024-03-01 07:27 GMT

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு பல்வேறு வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான 3வது தவணையாக ரூ. 1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பீகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.11,157 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.5,797 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த பட்டியலில் தமிழ்நாடு 6 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிதி பங்கீடு தொடர்பாக மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்