பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் தாலுகா குஞ்ஜள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் அனில் (வயது 20). ரம்சான் (35). இவர்கள் 2 பேரும் கோழிகள் வளர்த்து அவற்றை கடைகளுக்கு இறைச்சிக்காக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் லாரியில் கோழிகளை ஏற்றி கொண்டு சென்றனர்.
அவர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை லாரி இழந்தது. பின்னர், அந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணித்த அனில் மற்றும் ரம்சான் ஆகிய 2 பேரும் பலியாகினர். இதுகுறித்து எரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.