கார் டிரைவரின் உடலை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்காத தனியார் ஆஸ்பத்திரி

சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தாததால் கார் டிரைவரின் உடலை, குடும்பத்தினரிடம் ஒப்படைக்காத தனியார் ஆஸ்பத்திரியிடம் நிாவாகத்திடம் சுகாதாரத்துறை கமிஷனர் ரன்தீப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2022-09-28 18:45 GMT

பெங்களூரு:

ராமநகர் மாவட்டம் கனகபுரா டவுன் பசவேஸ்வராநகரை சேர்ந்தவர் மகேஷ்(வயது 57). கார் டிரைவர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட மகேஷ் பெங்களூரு பேடராயனபுராவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கல்லீரல் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். மகேசின் சிகிச்சை செலவாக அவரது குடும்பத்தினர் ரூ.6.87 லட்சத்தை செலுத்தி இருந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மகேஷ் இறந்தார். ஆனால் அவரது உடலை குடும்பத்தினரிடம் கொடுக்க மறுத்த தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் ரூ.3½ லட்சம் கட்டண பாக்கி இருப்பதாகவும், அந்த பணத்தை செலுத்திவிட்டு உடலை பெற்று செல்லும்படி கூறியது. மேலும் 5 நாட்கள் ஆகியும் மகேசின் உடலை ஆஸ்பத்திரி நிர்வாகம் குடும்பத்தினரிடம் கொடுக்கவில்லை. இதுபற்றி அறிந்ததும் சுகாதாரத்துறை கமிஷனர் ரன்தீப், ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் பேசினார். அப்போது ரூ.1¼ லட்சம் கொடுத்தால் மகேசின் உடலை கொடுக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. பின்னர் ரூ.1¼ லட்சம் செலுத்தி மகேசின் உடலை குடும்பத்தினர் பெற்று சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்