இந்தியாவை மிரட்டும் எச்3என்2 வைரஸ் கொரோனோ போல பரவும்.. முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை
இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் கொரோனா போல வேகமாக பரவக்கூடியது என முன்னாள் எய்ம்ஸ் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக ஐசிஏஆர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஏய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரசானது, எச்1என்1 வைரசின் மாறுபாடு அடைந்த வைரஸ் என்று குறிப்பிட்டார்.
காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் என்று தெரிவித்தார். எச்3என்2 வைரஸ் கொரோனோ போல வேகமாக பரவும் என்று குறிப்பிட்டுள்ள அவர், முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வயதானவர்கள், இதற்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.