ஆபாச படம் பார்க்க சொல்லி சிறுமிக்கு தொல்லை; தொழிலாளி கைது

பண்ட்வால் அருகே ஆபாச படம் பார்க்க சொல்லி சிறுமிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-29 19:00 GMT

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கோல்தமஜலு பகுதியை சேர்ந்தவர் ஷமீர் (வயது 39). இவர் புடோலியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதேபோல் அந்த பகுதியில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த சிறுமி தினமும் வெளியே சென்று விட்டு வரும்போது, ஷமீர் அந்்த சிறுமியை பின்தொடர்ந்து சென்று ஆபாச படங்கள் அடங்கிய `மெமரி கார்டு'களை அவர் முன்னால் வீசி அதனை எடுத்து பாா்க்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அந்த சிறுமி பலமுறை கண்டித்துள்ளார்.

ஆனால் அதனை கேட்காமல் தொடர்ந்து ஷமீர் அந்த `மெமரி கார்ட்டை' வீசி வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் ஷமீர், சிறுமியிடம் ஆபாச படங்களை பார்க்குமாறு `மெமரி கார்ட்டை' வீசியுள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி உடனே இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இதுகுறித்து விட்டலா போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷமீரை கைது செய்தனர். மேலும் அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்