விமானங்கள் சாகசத்தை ரசிக்க தடையாக இருந்த 'மூடுபனி'

மூடுபனியால் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற கடமைப்பாதையில், 800 மீட்டர் தொலைவுக்கு ஒன்றுமே தெரியவில்லை. பனி மூட்டம்தான் தெரிந்தது.

Update: 2023-01-27 01:00 GMT

புதுடெல்லி,

டெல்லியில் நாட்டின் 74-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர் எகிப்து அதிபர் எல் சிசி. ஆனால் அழைக்கப்படாமல் வந்து கலந்துகொண்ட விருந்தினர், மூடுபனி.

இந்த மூடுபனியால் அணிவகுப்பு நடைபெற்ற கடமைப்பாதையில், 800 மீட்டர் தொலைவுக்கு ஒன்றுமே தெரியவில்லை. பனி மூட்டம்தான் தெரிந்தது.

இதனால் விண்ணில் ரபேல், மிக்-29, சு-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் மட்டுமின்றி சி-130 சூப்பர் ஹெர்குலிஸ், சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் என சுமார் 50 விமானங்கள் அணிவகுத்து சாகசங்களை நடத்திக்காட்டினாலும் அவற்றை பார்வையாளர்கள் முழுமையாகக் கண்டு ரசிக்க மூடுபனி ஒரு தடையாக வந்து அமைந்து விட்டது.

பார்வையாளர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று தங்கள் செல்போன் கேமராக்களில படம் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மூடுபனியால் தெளிவாக தெரியாததால் சோர்ந்தனர்.

டெல்லியின் காற்றுத்தரக்குறியீடு மதியம் 12 மணிக்கு 287 ஆக இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியது.

Tags:    

மேலும் செய்திகள்