அசாம்: பிறந்த பெண் குழந்தையை ரூ.6000-க்கு விற்ற தந்தை..! 3 பேர் கைது
அசாமில் பிறந்த பெண் குழந்தையை வேறொரு நபருக்கு ரூ. 6,000 க்கு விற்றதாக தந்தை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அசாம்:
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள கோஹ்பூர் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தை இறந்து பிறந்ததாக குழந்தையின் தந்தை கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது தந்தை மகோனி கச்சாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கோஹ்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தந்தை லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு ரூ.6000-த்துக்கு விற்றதாக கூறப்படுகிறது.
குழந்தையை பாதுகாப்பாக மீட்ட போலீசார் கடத்தல் தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.