தனியார் நிறுவன ஊழியர் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

கெட்டுப்போன சாக்லெட் விற்றதாக தனியார் நிறுவன ஊழியர் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-24 14:45 GMT

பெங்களூரு-

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்தவர் கிரிதர் கோபால் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் 7 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அந்த பகுதியில உள்ள வணிக வளாகத்திற்கு சென்றார். அங்கு ரூ.805 மதிப்பிலான சாக்லெட் பாக்ஸ் ஒன்றை வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்ததும், அதில் இருந்த சாக்லெட்டை அவரது மனைவி மற்றும் 7 மாத குழந்தை சாப்பிட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சாக்லெட்டை சோதனை செய்தபோது அது கெட்டுபோனதும், அதில் புழுக்கள் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக சாக்லெட் தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து அவர் பெங்களூரு நுகர்வோர் கோர்ட்டில் வணிக வளாகம் மற்றும் சாக்லெட் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொருட்களை உற்பத்தி செய்த பின்னர், விற்பனை செய்தவர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இதையடுத்து கெட்டுப்போன சாக்லெட்டை கொடுத்த வணிக வளாகம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15 ஆயிரத்தை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்