தொடுபுழாவில் தடுப்பூசி போட்ட டாக்டரை கடித்து குதறிய நாய்

தொடுபுழாவில் வெறிபிடித்த நாய்க்கு தடுப்பூசி போட்ட டாக்டரை கடித்து குதறியது.

Update: 2022-09-21 06:01 GMT

மூணாறு:

இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் யூஜின். விவசாயி. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் திடீரென்று வெறிபிடித்த அந்த நாய், யூஜினின் மனைவியை கடித்தது.

உடனே இதுகுறித்து கால்நடை துறை டாக்டருக்கு யூஜின் தகவல் தெரிவித்தார். அதன்படி, அவரது வீட்டுக்கு வந்த கால்நடை டாக்டர் ஜெய்சன் ஜார்ஜ், வெறிபிடித்த நாய்க்கு தடுப்பூசி போட்டார். அப்போது அந்த நாய், டாக்டரை கடித்து குதறியது.

இதையடுத்து அந்த நாய் கால்நடை துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் நாய் கடித்ததால் காயமடைந்த டாக்டர் ஜெய்சன் ஜார்ஜ் மற்றும் யூஜினின் மனைவி ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்