திருமண விழாவில் மீது திராவகம் வீச்சு மணமக்கள் மற்றும் 12 பேர் கருகினர்
திருமணத்தில் விருப்பமில்லாத யாரோ மர்ம நபர், மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மணமக்களை நோக்கி மீது திராவகம் போன்ற பொருளை வீசிவிட்டு தப்பிவிட்டார்.
ஜக்தல்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண விழாவின்போது திராவகம் போன்ற பொருளை வீசியதில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் 12 பேர் உடல் கருகினர். அங்குள்ள பஸ்தார் மாவட்டம், ஜோட் அம்பால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. மணமகன் டாம்ருதர் பாகெல் (வயது 25) மணமகள் சுனிதா காஸ்யப் (19) ஆகியோரின் திருமணம் நேற்று முன்தினம் மணமகள் வீட்டில் நடந்தது.
திருமணத்தில் விருப்பமில்லாத யாரோ மர்ம நபர், மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மணமக்களை நோக்கி மீது திராவகம் போன்ற பொருளை வீசிவிட்டு தப்பிவிட்டார். இதில் மணமக்கள் மற்றும் அவர்களை சுற்றி நின்ற உறவினர்கள் 12 பேர் பாதிக்கப்பட்டனர்.
அந்த பகுதி எம்.எல்.ஏ.வும் திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தார். அவர், சம்பவம் நடந்ததும் காயம் பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மணமக்களும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.