பெட்டி காலி; ஆனால்... 2.4 கிலோ ஹெராயினை நூதன முறையில் கடத்திய உகாண்டா நபர்

மும்பை விமான நிலையத்தில் காலி அட்டை பெட்டியில் நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.16.8 கோடி மதிப்பிலான 2.4 கிலோ ஹெராயினை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

Update: 2023-04-17 10:02 GMT

புனே,

மராட்டியத்தில் மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவர் போதை பொருளை கடத்தி வருகிறார் என்ற உளவு தகவல் கிடைத்து சுங்க இலாகா அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ஒவ்வொரு பயணியிடமும் வழக்கம்போல் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், உகாண்டா நாட்டின் என்டெப்பே நகரை சேர்ந்த வெளிநாட்டு பயணி ஒருவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவரிடம் காலி பெட்டி ஒன்று இருந்து உள்ளது. அதில் எதுவும் காணப்படாத சூழலில், சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த உண்மை தெரிய வந்தது.

அந்த வெளிநாட்டு நபர், அட்டை பெட்டிக்குள் வைத்து கடத்தினால் பிடித்து விடுவார்கள் என்பதற்காக பெட்டியை காலியாக வைத்து விட்டு அட்டைக்குள் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தி உள்ளார்.

இதனை தொடர்ந்து அட்டைக்குள் இருந்த 2.4 கிலோ எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் அதிகாரிகளால் வெளியே எடுக்கப்பட்டது. அந்த வீடியோவும் வெளியிடப்பட்டு உள்ளது.

அவற்றின் சந்தை மதிப்பு ரூ.16.8 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து உகாண்டா நபரை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்