கர்நாடகத்தின் 6-வது முதல்-மந்திரி எஸ்.ஆர்.காந்தி

கர்நாடகத்தின் 6-வது முதல்-மந்திரியாக எஸ்.ஆர்.காந்தி பதிவியேற்றார்.

Update: 2023-04-09 18:45 GMT

பெங்களூரு-

கர்நாடகத்தின் 6-வது முதல்-மந்திரி என்ற பெருமைக்குரியவர் சிவலிங்கப்பா ருத்ரப்பா காந்தி (எஸ்.ஆர்.காந்தி). இவர் கர்நாடகத்தில் 1962-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் அதே ஆண்டு ஜூன் 21-ந்தேதி வரை முதல்-மந்திரியாக பதவி வகித்தார். கடிதால் மஞ்சப்பாவுக்கு பிறகு குறைந்த நாள் முதல்-மந்திரியாக இருந்தவர் இவர் தான். இவர் மொத்தம் 99 நாட்கள் முதல்-மந்திரி பதவி வகித்தார். எஸ்.ஆர்.காந்தி, 1908-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்தேதி பீஜாப்பூர் மாவட்டம் (தற்போது விஜயாப்புரா) கெரூர் கிராமத்தில் பிறந்தாா். பீஜாப்பூரில் பள்ளி படிப்பை முடித்த எஸ்.ஆர்.காந்தி, மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் சட்ட படிப்பை படித்தார். பின்னர் அரசியலில் தீவிர ஆர்வம் கொண்ட அவர், காங்கிரசில் இணைந்தார். பின்னர் 1946-ல் பாம்பே பிரசிடன்சியில் பீஜாப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். கடந்த 1952-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 1956-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை பாம்பே பிரசிடென்சியின் முதல் துணை சபாநாயகராக பதவி வகித்தார். அதன்பிறகு 1956 முதல் 1962-ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் 4-வது சபாநாயகராக பணியாற்றினார்.

கர்நாடக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு உனகுந்து தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.காந்தி, 1962-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் அதே ஆண்டு ஜூன் 21-ந்தேதி வரை 99 நாட்கள் கர்நாடத்தின் 6-வது முதல்-மந்திரியாக இருந்தார். இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தை நிறுவியதில் முக்கிய பங்காற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்