டெல்லியில் பயங்கரம்: சலூன் கடைக்குள் 2 வாலிபர்கள் சுட்டுக்கொலை

காயம் அடைந்த ஒருவர் கெஞ்சியபோதும் அந்த நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர்.;

Update: 2024-02-09 20:26 GMT

புதுடெல்லி,

தென்மேற்கு டெல்லியின் நஜாப்கார் பகுதியில் ஒரு சலூன் கடை இயங்கி வருகிறது. நேற்று இங்கு சில வாடிக்கையாளர்கள் முடி அலங்காரம் செய்து கொள்ள வந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், கடைக்குள் இருந்த 2 வாலிபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காயம் அடைந்த ஒருவர் கெஞ்சியபோதும் அந்த நபர்கள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர். இதைக்கண்டு மற்ற வாடிக்கையாளர்களும், சலூன் கடை தொழிலாளர்களும் வாயடைத்து நின்றனர்.

துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த வாலிபர்களின் உடல்களை மீட்டனர். அவர்களின் பெயர் சோனு மற்றும் ஆஷிஸ் என்று தெரியவந்தது. இருவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். வாலிபர்களுக்கு இடையிலான குழு மோதலில் இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் கூறுகிறார்கள். துப்பாக்கியால் சுட்ட நபர்கள் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும். துப்பாக்கி சூடு பற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

 

Tags:    

மேலும் செய்திகள்