தெலுங்கானா: மகளிருக்கு ரூ.2,500, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர்; சோனியா காந்தி வாக்குறுதி

தெலுங்கானாவில் பொது பேரணியில் பங்கேற்ற சோனியா காந்தி, மகளிருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்.

Update: 2023-09-17 14:14 GMT

ஐதராபாத்,

தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஐதராபாத் நகரில் பொது பேரணி ஒன்றில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவரான சோனியா காந்தி இன்று கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பல வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். அவர் பேசும்போது, தெலுங்கானாவில் உள்ள மகளிர் நலனுக்காக மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் நிதி உதவியாக ரூ.2,500 வழங்கப்படும்.

சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும். தெலுங்கானா முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள திட்டம் கொண்டு வரப்படும்.

தெலுங்கானா மக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாங்கள் 6 உத்தரவாதங்களை அளிக்கிறோம். ஒவ்வொன்றையும் நிறைவேற்ற முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம் என அவர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, சக்தி திட்டத்தின் கீழ் மகளிருக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் மேற்கொள்வதற்கான சலுகைகளை வழங்கி உள்ளது. இதற்காக அரசு சார்பில் பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்