ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதல்: லாரி டிரைவர், கிளீனர் பலி

தவறான பாதையில் வந்த டேங்கர் லாரி, எதிரே வந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரின் மீது நேருக்கு நேர் மோதியது.

Update: 2023-08-23 09:57 GMT

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை -பரோடா எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்த பயங்கர விபத்தில் டேங்கர் லாரியின் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிரிழந்தனர். உம்ரி கிராமத்தின் அருகே நேற்று மாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தவறான பாதையில் வந்த டேங்கர் லாரி, எதிரே வந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் லாரியின் முன்பகுதி கடுமையாக சிதைந்தது. டிரைவர் மற்றும் கிளீனர் இருவரும் உயிரிழந்தனர்.

அதேசமயம் மோதிய வேகத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் தீப்பற்றியது. அதில் காரில் இருந்த ஐந்து பேரும் சிக்கிக்கொண்டனர். அவர்களை, மற்றொரு காரில் பின்னால் வந்த அவர்களின் உறவினர்கள் சிறிது நேரத்தில் மீட்டனர். காரில் இருந்த 3 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காரில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதையடுத்து கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து கருகியது.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்