தமிழிசை-ரங்கசாமி பக்ரீத் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.;
புதுச்சேரி,
பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பக்ரீத் திருவிழா தியாகம் மற்றும் பக்தியின் உயர்வை குறிக்கிறது. பக்ரீத் கொண்டாட்டங்கள் ஈகை, சகோதரத்துவம், சேவை எண்ணங்களை வலுப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கம், இரக்கம், நட்பு போன்றவற்றை உயர்த்தி பிடிப்பதே உண்மையான பக்ரீத் கொண்டாட்டங்களின் நோக்கம். அனைவருக்கும் எனது பக்ரீத் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இறைத்தூதர் என்று இஸ்லாமிய மக்களால் நம்பப்படும் இப்ராகிம் நபி அர்ப்பணிப்பும், புனிதத்துவமும் கொண்ட வாழ்க்கையையும், அவரது தியாகத்தின் மேன்மையையும் போற்றும் வகையில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்கள் இந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்பதைவிட இப்ராகிம் போதித்த ஈகையின் மகத்துவத்தை இதயத்தில் வைத்து போற்றுகிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
வறியவர்க்கொன்று ஈவதே ஈகை என்பதே உலகிற்கு உணர்த்தும் உன்னத நாளாக விளங்கும் ஈகை திருநாளில், இஸ்லாமிய பெருமக்கள் அனைவரது வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்து நன்மைகள் செழித்திட எனது உளம் நிறைந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.