ரெயில் விபத்து: ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் உடன் தமிழக குழு சந்திப்பு..!
ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.;
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பல தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு ஒடிசா விரைந்துள்ளது.
இந்த நிலையில் ஒடிசா சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சர் சிவ சங்கர் மற்றும் அதிகாரிகள் குழு, ஒடிசா மாநில முதல் மந்திரியை சந்தித்தனர் . ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழர்களுக்கு தேவையான உதவிகளை ஒடிசா அரசு வழங்கும் என முதல் மந்திரி நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளார்.