பல ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்த 70 வயது மூதாட்டிக்கு, உதவிக்கரம் நீட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி!

உத்தரபிரதேசத்தில் பல வருடங்களாக மின்சார வசதியின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டிகு மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்தார் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர்.

Update: 2023-06-27 09:34 GMT

லக்னோ,

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ்வதை நினைத்தால் வியப்பாக உள்ளது. இந்தநிலையில் உத்தர பிரதேச மாநில ஐபிஎஸ் அதிகாரியான அனுக்ரிதி ஷர்மா, வயதான பெண்ணின் வீட்டிற்கு மின்சாரம் கொண்டு வந்த தருணத்தின் இதயத்தைத் தூண்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

70 வயது மூதாட்டியின் வீட்டிற்கு மின்சாரம் வந்ததும், ஒரு பல்பு எரிந்ததும் அந்தப் மூதாட்டியின் முகம் மலர்ந்தது. அந்த அளவு கடந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவரது வீட்டில் இருந்த போலீஸ்காரர்களும் அவரது புன்னகையை பார்த்து புன்னகை பூத்தனர்.

பல வருடங்களாக மின்சார வசதியின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டி நூர்ஜஹானின் வீட்டிற்கு மின் இணைப்பை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐபிஎஸ் அத்காரி அனுக்ரித்தி ஷர்மா

அதுமட்டுமின்றி, காவல்துறை நிதியில் இருந்து மூதாட்டிக்கு அன்பளிப்பாக மின்விசிறியும் வழங்கப்பட்டது. மின் இணைப்பு அளித்த மகிழ்ச்சியில் அனைத்து காவலர்களுக்கும் இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்தார் நூர்ஜஹான்

Tags:    

மேலும் செய்திகள்