புதுச்சேரியில் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை
புதுச்சேரியில் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநரால் வெளியிடப்பட்ட தீவிர வெப்பம் / வெப்ப அலைக்கான பொது சுகாதார ஆலோசனையின் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் அனைத்து அரசு,தனியார்,சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கோடை விடுமுறை 29.04.2024 முதல் தொடங்கும். இதேபோல், கோடை விடுமுறை முடிந்து 06.06.2024 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.