இறந்தவரின் சிறுநீரகங்களை 2 பேருக்கு பொருத்தி வெற்றி

விபத்தில் இறந்தவரின் சிறுநீரகங்களை 2 பேருக்கு பொருத்தி தனியார் ஆஸ்பத்தி வெற்றி கண்டுள்ளனர்.

Update: 2022-11-10 17:16 GMT

உப்பள்ளி:-

பெலகாவியை சேர்ந்தவர் சிதாராந்த பத்தார்(வயது 57). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருடைய உறவினர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன் அடிப்படையில் அவரது இதயம், கண்கள், 2 சிறுநீரகங்கள் அறுவை சிகிச்ைச மூலம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் 2 சிறுநீரகங்கள் தார்வாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி அந்த தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு சிறுநீரகங்களை பொருத்தி வெற்றி அடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்