ஆன்லைனில் தேர்வு வையுங்கள் - பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-24 14:10 GMT

கொல்கத்தா,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தடைபட்டது. மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தவாறு ஆன்லைன் மூலம் கல்வி பயின்றனர். அதேவேளை, தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையில், தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், இன்னும் சில நாட்களில் தேர்வுகளும் நடத்தப்பட்ட உள்ளது. தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால், தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைனில் தேர்வு வையுங்கள் என்ற பதாகையுடன் மாணவ-மாணவிகள் கொல்கத்தா பல்கலைக்கழகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பல்கலைக்கழக வளாகம் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்