எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு பா.ஜனதா நிதி உதவி அளிக்கிறதா?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்

எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு பா.ஜனதா நிதி உதவி அளிக்கிறதா? என்பதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.

Update: 2022-07-29 17:20 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தற்போது நடந்த கொலைகள் குறித்து சித்தராமையா விமா்சனம் செய்துள்ளார். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது 32 கொலைகள் நடைபெற்றன. அப்போது அவர் என்ன செய்தார். எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்யக்கூடாது. அவர் கூறும் கருத்துகளுக்கு மதிப்பு கிடையாது. எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. போன்ற அமைப்புகள் மீது இருந்த வழக்குகளை சித்தராமையா வாபஸ் பெற்றார். அதனால் அவர்கள் மீண்டும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.சித்தராமையா வெறுமையாக பேசுகிறார். அவரது பேச்சால் எந்த பயனும் இல்லை.

மாநில அரசு வேகமாக செயல்பட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பதே பா.ஜனதா தான் என்று காங்கிரஸ் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. இது காங்கிரசின் கட்சியின் அரசியல் திவால் தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. மந்திரிகள் யாரும் ராஜினாமா செய்ய தேவை இல்லை. இத்தகைய நெருக்கடியான நேரத்தில் கடமையில் இருந்து விலகி இருக்க மாட்டோம். உறுதியான நின்று நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்