மோட்டர் பம்ப்செட் திருடியதாக 2 பேர் கைது

சிக்கமகளூரு அருகே மோட்டர் பம்ப்செட் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-28 19:00 GMT

சிக்கமகளூரு; 


சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா இத்தலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபால். விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் உள்ளே புகுந்துள்ளனர்.

அந்த மர்மநபர்கள் தோட்டத்தில் இருந்த மின் மோட்டார் மற்றும் செடிகளுக்கு மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் எந்திரங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து ஸ்ரீபால், ஆல்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அன்சூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர்(வயது 28), யோகேஷ்(வயது 32) ஆகியோர் மின் மோட்டார் மற்றும் எந்திரங்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மின் மோட்டார் மற்றும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஆல்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்