5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: தேர்தல் கமிஷன் இன்று முக்கிய ஆலோசனை

தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் கமிஷன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது.

Update: 2023-10-05 23:59 GMT

புதுடெல்லி,

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆலோசனையில் இருந்து வரும் நிலையில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது. மற்ற மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு 5 மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.

இது தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. தெலுங்கானா மாநிலத்தில் அதிகாரிகளின் ஆய்வுப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனைத்தொடர்ந்து காவல் மற்றும் பொது-செலவின தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான வியூகங்களை வகுக்க முடிவு செய்து உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் 5 மாநிலங்களுக்கும் அடுத்த சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட 5 மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதாவும், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரசும், தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்