நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கைக்கு 44 ஆயிரம் டன் உரம் இந்தியா வழங்கியது
பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது.
கொழும்பு,
பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. கடன்களில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ஜனவரி முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் உதவிகள் வழங்க உறுதி அளித்துள்ளது. உணவு தானிய தட்டுப்பாட்டில் தவித்து வருகிற அந்த நாட்டின் உற்பத்தியை பெருக்க ஏதுவாக 65 ஆயிரம் டன் யூரியா உரம் வழங்குவதற்கும் இந்தியா உறுதி அளித்தது. இந்த நிலையில், இந்தியா அந்த நாட்டுக்கு 44 ஆயிரம் டன் யூரியா உரம் வழங்கி உள்ளது. இந்த உரம் கொழும்பு போய்ச் சேர்ந்து விட்ட தகவலை இலங்கை விவசாய மந்திரி மகிந்த அமரவீராவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து தெரிவித்தார்.
இதை ஒரு டுவிட்டர் பதிவில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.