டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு; விமான கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவு!

விமான கட்டணத்தை 10-15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் முடிவெடுத்துள்ளது.

Update: 2022-06-16 06:41 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், ரூபாய் மதிப்பு சரிவு, ஜெட் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விமான கட்டணத்தை 10-15 சதவீதம் உயர்த்த முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக, ஸ்பைஸ்ஜெட் தலைவரும் நிர்வாக இயக்குனருமான அஜய் சிங் இன்று கூறியதாவது: "விமான கட்டணத்தை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

ஜூன் 2021 முதல் விமான எரிபொருள் விலை 120 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. விமான எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

எரிபொருள் விலை உயர்வு, விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இத்தனை நாட்கள் இவற்றை தாங்கிக் கொண்டோம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்